FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பாரத மாதா ஆலயம் அமைக்கும் அறிவிப்பு: சு.திருநாவுக்கரசர் வரவேற்பு

தருமபுரியில் பாரத மாதாவுக்கு ஆலயம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜூன் 2018, 3:14 am IST
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா ஆலயம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனை பாராட்டி கௌரவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சு.திர
பகிர்:

தருமபுரியில் பாரத மாதாவுக்கு ஆலயம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் ரூ.1.50 கோடி மதிப்பில் நூலகத்துடன் கூடிய பாரத மாதா ஆலயம் அமைக்கப்படும் என்று தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்துள்ளது மகிழ்ச்சிக்குரியது. இதன் மூலம் சுதந்திரப் போராட்ட தியாகி சுப்ரமணிய சிவாவின் கனவு நிறைவேறியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் பல ஆண்டுகளாக இந்த ஆலயத்துக்காகத் தொடர்ந்து போராடி வந்தார். அவர் எடுத்த முயற்சிக்கும் உழைப்புக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments