FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உங்களைப் போல நாங்களும் "படம்" காட்ட விரும்பவில்லை: தமிழிசைக்கு ஆதாரத்துடன் பதில் கொடுத்த கமல் கட்சி! 

உங்களைப் போல நாங்களும் "படம்" காட்ட விரும்பவில்லை என்று கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பான தமிழிசையின் புகாருக்கு கமலின் மக்கள் நீதி மய்யம் ஆதாரத்துடன் பதில் கொடுத்துள்ளது.

30 ஜனவரி 2024, 5:58 pm IST
பகிர்:

சென்னை: உங்களைப் போல நாங்களும் "படம்" காட்ட விரும்பவில்லை என்று கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பான தமிழிசையின் புகாருக்கு கமலின் மக்கள் நீதி மய்யம் ஆதாரத்துடன் பதில் கொடுத்துள்ளது.

தமிழக பாரதிய ஜனதா பாஜக தலைவர் தமிழிசை செவ்வாயன்று செய்தியாளர் சந்திப்பில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் மீது குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து எனக்கு ஒரு மெயில் வந்துள்ளது. அதில் நான் அக்கட்சியில் இணைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து நீங்கள் எங்கள் கட்சியின் உறுப்பினர். இதுதான் உங்கள் உறுப்பினர் எண். இணைந்ததற்கு நன்றி என்று அந்த மெயிலில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இவ்வாறு தெரிவித்த தமிழிசை ஆதாரமாக தனது ஐபேடில் அந்த மெயிலை காட்டினார். அத்துடன் என் மெயில் ஐடி இவர்களுக்கு எப்படி கிடைத்தது? எனவே அவர்கள் கையில் கிடைக்கும் மெயிலுக்கு எல்லாம் கமல் கட்சியினர் அழைப்பு அனுப்பி ஆள் சேர்க்கிறார்கள். கமல் பொய்யான கட்சி நடத்தி வருகிறார் என்று குற்றசாட்டுகளை அடுக்கினார்.

அதற்கு உடனடியாக கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், 'கட்சியில் சேர யாருக்கும் அழைப்பு அனுப்பவில்லை. எங்கள் இணையதள பக்கத்தில் பதிவு செய்தால் மட்டுமே, அவர்களுக்கு மெயில் அனுப்பப்படும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் உங்களைப் போல நாங்களும் "படம்" காட்ட விரும்பவில்லை என்று கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பான தமிழிசையின் புகாருக்கு கமலின் மக்கள் நீதி மய்யம் புதனன்று ஆதாரத்துடன் பதில் கொடுத்துள்ளது. 

இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இணையதள பதிவு தொடர்பான ஆதாரத்துடன் வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

உங்கள் இணையதளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம் , எங்களிடம் இருக்கிறது தமிழிசை அவர்களே ...! நீங்கள் காட்டியது போல நாங்களும் "படம்" காட்ட விரும்பவில்லை. உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடாதல்லவா ?

ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம். உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்தை அஞ்சினால் செய்த  பதிவை ரத்து செய்து கொள்ளவும் வழியிருக்கிறது. அதுவரை..

இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments