FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இன்று முதல் புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்

சென்னை-அரக்கோணம் மற்றும் திருத்தணிக்கும், அங்கிருந்து வரும் அனைத்து புறநகர் மின்சார ரயில்களும் வியாழக்கிழமை முதல் வழக்கம்போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம்

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

சென்னை-அரக்கோணம் மற்றும் திருத்தணிக்கும், அங்கிருந்து வரும் அனைத்து புறநகர் மின்சார ரயில்களும் வியாழக்கிழமை முதல் வழக்கம்போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி காரணமாக, கடந்த சில நாள்களாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு வந்தது. தற்போது பொறியியல் பாராமரிப்புப் பணி நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, ரயில்கள் வழக்கம்போல இயங்கத் தொடங்கியுள்ளன.
சென்னையில் இருந்து அரக்கோணம், திருத்தணிக்குச் செல்லும் அனைத்து புறநகர் மின்சார ரயில்களும், அங்கிருந்து வரும் மின்சார ரயில்களும் வியாழக்கிழமை முதல் வழக்கம்போல் இயங்கும். ஆனாலும், சில பயணிகள் ரயில்கள் வியாழக்கிழமை (மே 10) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்றும் ரத்து செய்யப்படும் ரயில்கள்: காட்பாடி-அரக்கோணத்துக்கு வியாழக்கிழமை அதிகாலை 4.35 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில், அரக்கோணம்-கடப்பாவுக்கு காலை 7.05 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில், கடப்பா-அரக்கோணத்துக்கு மதியம் 2.45 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில், அரக்கோணம்-சென்னை சென்ட்ரலுக்கு இரவு 10.15 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments