ஓமந்தூரார் மருத்துவமனைக்கு ரூ.18 கோடியில் புற்றுநோய் கருவிகள்: விமான நிலைய ஆணையத்துடன் ஒப்பந்தம்
சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை துறைக்கு ரூ.18.5 கோடி மதிப்பிலான புற்றுநோய் சிகிச்சைக் கருவிகள் அளிப்பதற்கான
சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை துறைக்கு ரூ.18.5 கோடி மதிப்பிலான புற்றுநோய் சிகிச்சைக் கருவிகள் அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னை விமான நிலைய ஆணையத்துடன் கையெழுத்தாகியுள்ளது.
2014 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஓமந்தூரார் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கதிர்வீச்சு புற்றுநோய் துறையில் ஒரு மாத்தில் 120 புற்றுநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்தத் துறைக்குத் தேவையான மூன்று கருவிகளை சென்னை விமான நிலைய ஆணையம் அளிக்க உள்ளது. விமான நிலைய ஆணையத்தின் சமூக பங்களிப்புத் திட்டத்தின்கீழ் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனையின் ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் ஆனந்த் குமார் கூறியது:
கதிர்வீச்சு புற்றுநோய் துறைக்கென்று பிரத்யேகமாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் இந்த மூன்று கருவிகளும் நிறுவப்பட உள்ளன. ரூ.6 கோடி மதிப்பிலான கட்டடப் பணிகள் இன்னும் சில மாதங்களில் நிறைவடைய உள்ளன. அதற்குப் பிறகு கருவிகள் நிறுவப்படும். சென்னை விமான நிலைய ஆணையம் முதல்கட்டமாக ரூ.2 கோடியை தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்திடம் அளித்துள்ளது என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.