FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னையில் மே 13-இல் 'தினமணி' மகளிர் மணி 'அம்மா' நூல் வெளியீடு

'தினமணி' இணைப்பு 'மகளிர் மணி'யில் தொடர்ந்து வெளியாகி வரும் 'அம்மா' (பிரபலங்களின் தாயார் குறித்த நினைவுகள்) தொடர் தொகுக்கப்பட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 13) நூலாக வெளியிடப்படுகிறது.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

'தினமணி' இணைப்பு 'மகளிர் மணி'யில் தொடர்ந்து வெளியாகி வரும் 'அம்மா' (பிரபலங்களின் தாயார் குறித்த நினைவுகள்) தொடர் தொகுக்கப்பட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 13) நூலாக வெளியிடப்படுகிறது.
அன்னையர் தினத்தை (மே 13) முன்னிட்டு, சென்னை நாரத கான சபாவில் 'தினமணி' சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு 'அம்மா' நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் இதுவரை எழுத்தாளர்கள் இந்துமதி, சிவசங்கரி, பத்திரிகை ஆசிரியர் சீதா ரவி, நடனக் கலைஞர்கள் அலர்மேல்வள்ளி, சுதா ராணி ரகுபதி, ஐஏஎஸ் அதிகாரி ஜோதி நிர்மலா, இயக்குநர் சுஹாசினி மணிரத்தினம், டாக்டர் பிரியா ராமச்சந்திரன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, சொற்பொழிவாளர் பாரதி பாஸ்கர் உள்ளிட்ட 28 பிரபலங்களின் தாயார் குறித்த நினைவுகள் வெளியாகியுள்ளன.
'அம்மா' நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு 'தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை வகிக்கிறார். நடிகர் சிவகுமார் முதல் பிரதியை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்துகிறார். சென்னை அரசு மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் சுதா சேஷய்யன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு ஏற்புரை வழங்குகிறார். எக்ஸ்பிரஸ் நெட்ஒர்க் (பி) லிட் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆர்.வி.சுப்பிரமணியம் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments