FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருச்சியில் இடி- மின்னலுடன் கொட்டித் தீர்த்த பலத்த மழை

அக்னி நட்சத்திரம் காரணமாக திருச்சியில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவான நிலையில், புதன்கிழமை மாலை சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 

30 ஜனவரி 2024, 6:30 pm IST
திருச்சி மேலப்புதூர் சுரங்கப் பாலத்தில் தேங்கியிருந்த மழை நீரில் புதன்கிழமை மாலை சிக்கிய அரசுப் பேருந்து.
பகிர்:

அக்னி நட்சத்திரம் காரணமாக திருச்சியில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவான நிலையில், புதன்கிழமை மாலை சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 
சித்திரை மாதம் தொடங்கும் முன்னரே திருச்சியில் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டு வந்தது. இந்நிலையில், அக்னி நட்சத்திரம் மே 4 ஆம் தேதி தொடங்கிய நிலையில், வெயிலின் அளவும் படிப்படியாக அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, கடந்த திங்கள்கிழமை அதிகபட்சமாக திருச்சியில் 104 டிகிரி அளவில் வெயில் பதிவானது. 
இந்நிலையில், திருச்சியில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு மேல் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழை சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக பெய்தது. 
மாநகரில்...: உறையூர், சீனிவாசநகர், அம்மையப்ப நகர், குமரன்நகர், ராமலிங்கநகர் விரிவாக்கப் பகுதிகள், புத்தூர், குழுமணி சாலை, சாலை ரோடு, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகள், செந்தண்ணீர்புரம், சுப்பிரமணியபுரம், விமான நிலையம், குண்டூர், மார்க்கெட், மரக்கடை, சத்திரம் பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது.இதனால் மாநகரில் தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
சுரங்கப்பாலத்தில் சிக்கிய பேருந்து: மழை பெய்து கொண்டிருந்த நிலையில், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து எரங்குடி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை அதன் ஓட்டுநர் மேலப்புதூர் சுரங்கப்பாலம் வழியாக ஓட்டிச் சென்றார். அப்போது அப்பகுதியில் தண்ணீர் அதிகளவு தேங்கி நின்றதால் பேருந்தை இயக்க முடியவில்லை. பேருந்தில் இருந்த பயணிகள் பத்திரமாக இறங்கி நடந்து சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் பாலத்தின் இருபகுதிகளிலும் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் செல்ல தடை விதித்தனர். மழைநீர் படிப்படியாக வடிந்த பின்னர் மீட்பு வாகனம் மூலம் பேருந்து மீட்கப்படும் என்பதால், போலீஸார் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments