FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பி.இ. ஆன்-லைன் விண்ணப்பம்: இதுவரை 36,559 பேர் பதிவு

அண்ணா பல்கலைக்கழகழக பி.இ. சேர்க்கைக்கு இதுவரை 36,559 மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

அண்ணா பல்கலைக்கழகழக பி.இ. சேர்க்கைக்கு இதுவரை 36,559 மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.
பி.இ. படிப்பில் சேர ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மே 3-ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஏழு நாள்களில், அதாவது மே 9-ஆம் தேதி வரை மொத்தம் 36,559 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 4,745 பேர் மட்டுமே அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பப் பதிவைச் செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்-லைன் கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தொடங்க உள்ளது. முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த ஆன்-லைன் முறை மூலம், மாணவர்கள் அவரவர் வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கேற்கலாம். 
42 உதவி மையங்கள் மூலம்...: வீட்டில் இணையதள வசதி இல்லாத மாணவர்களின் வசதிக்காகவும், அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்காகவும் தமிழகம் முழுவதும் உயர்வேக இணையதள வசதியுடன் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உதவி மையங்களில் கட்டணமின்றி விண்ணப்பத்தைப் பதிவு செய்வதோடு, கலந்தாய்விலும் பங்கேற்கலாம்.
மே 30 வரை விண்ணப்பிக்கலாம்: பி.இ. படிப்பில் சேர மே 30-ஆம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments