28.38 லட்சம் பேருக்கு ரூ. 13,649 கோடி முதிர்வுத் தொகை: எல்ஐசி தகவல்
எல்ஐசியின் தென் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் 28.38 லட்சம் பேருக்கு ரூ. 13,649 கோடி முதிர்வுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று
எல்ஐசியின் தென் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் 28.38 லட்சம் பேருக்கு ரூ. 13,649 கோடி முதிர்வுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று எல்ஐசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எல்ஐசியின் தென் மண்டல பிராந்திய மேலாளர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
எல்ஐசியின் தென் மண்டலம் தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் 13 கோட்ட அலுவலகங்களுடனும், 261 கிளை அலுவலகங்களுடனும் இயங்கி வருகிறது.
கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் ரூ. 4,965 கோடி பிரீமிய வருவாயை ஈட்டி உள்ளது. இது கடந்த நிதி ஆண்டைக் காட்டிலும் 9 சதவீத வளர்ச்சியுடனும், இலக்கில் 108 சதவீதத்தையும் எட்டி உள்ளது. இதற்கு முந்தைய நிதி ஆண்டான 2016-17-இல் 4,555 வருவாயை ஈட்டி இருந்தது.
ஓய்வூதியம், குழுக் காப்பீட்டுத் துறையிலும், புது வணிக பிரீமியத்தில் 36.10 லட்சம் ஆயுள் காப்பீடுகளைப் பெற்று அதன் மூலம் ரூ.7,740.80 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வாழ்வு காலப் பயன்களையும் பட்டுவாடா செய்து இந்திய அளவில் முதல் இடத்தை தென் மண்டல பிராந்தியம் பெற்றுள்ளது.
மேலும், கடந்த நிதி ஆண்டில் 28. 38 லட்சம் பேருக்கு ரூ. 13, 649 கோடி முதிர்வுத் தொகையாகவும், 66 ஆயிரத்து 865 பேரின் இறப்பு உரிமங்களுக்கு உரிமத் தொகையாக ரூ. 886 கோடியும் வழங்கப்பட்டுள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.