முகப்பு
தமிழ்நாடு

கஜா புயல் பாதிப்பு: கும்பகோணம் உட்கோட்டக் காவல்துறையின் சார்பில் மீட்பு நடவடிக்கை

கஜா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவும் வண்ணம் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் உட்கோட்டத்தில் உள்ள அனைத்து காவல்

Updated On : 16 நவம்பர் 2018, 1:05 pm IST
பகிர்:

கஜா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவும் வண்ணம் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் உட்கோட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், மாவட்ட  காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவின்படி, புயல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

மீட்பு நடவடிக்கையில் எஸ்பி சிறப்பு காவல் படை எஸ்ஐ கீர்த்திவாசன் தலைமையில் 13 காவலர்கள் ஈடுபட்டு  உள்ளனர்.

கஜா  புயலினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் உடனே காவல் துறை கட்டுபாட்டு அறை எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்தால், உடன் அங்கு பேரிடர் மீட்பு படையினர் உதவிக்கு வருவார்கள் என காவல் துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

Advertisement

Advertisement

தயார் நிலையில் இருந்த பேரிடர் மீட்புப் படையினரை  மாண்புமிகு வேளாண்மை துறை அமைச்சர், துரைக்கண்ணு மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டனர்.  

- குடந்தை ப.சரவணன் (9443171383)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments