FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி! அதிர்ச்சி விடியோ! எவ்வளவு பெரிய பள்ளம்?

நிலவில் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி மோதும் விடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது, இதனால், நிலவில் எவ்வளவு பெரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் என அஞ்சப்படுவதுபற்றி..

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 1:24 pm IST
நிலவில் மோதிய ராக்கெட் பாகம் - from video grab
பகிர்:

விண்வெளியில், கட்டுப்பாட்டை இழந்து கடந்த ஒரு சில மாதங்களாக வலம்வந்து கொண்டிருந்த ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டின், ஒரு பேருந்து அளவு கொண்ட பகுதி நிலவில் மோதிய வேகத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மணிக்கு 8700 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்த அந்த ராக்கெட் பாகம், நிலவின் மேற்பரப்பில் மோதும்போது அதிலிருந்து மிகப்பெரிய தூசு படலம் மேலெழும்பிய விடியோக்கள் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

பூமியின் துணைக் கோளானா நிலவு என்பது , மனிதனுடன் நெருங்கிய உறவு கொண்டது. நிலவைக் காட்டி சோறூட்டிய மனிதன் தற்போது அங்கு குடியேற முடியுமா என்று ஆய்வு செய்து வருகிறான்.

Advertisement

Advertisement

அதுபோன்றதொரு விண்வெளி ஆய்வுக்காக எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அனுப்பிய செயற்கைக் கோள்களில் ஒன்று செயலிழந்து விண்வெளியில் சுற்றிக் கொண்டிருந்தது. இதுதான் தற்போது நிலவில் விழுந்துள்ளது. இது 4 ஆயிரம் கிலோ எடை கொண்டது என்றும், கிட்டத்தட்ட ஒரு பேருந்து போல இருக்கலாம் அல்லது 5 மாடிக் கட்டடம் போல இருக்கலாம் என்றெல்லாம் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட் பாகம் நிலவில் மோதியபோது எடுக்கப்பட்டது என்றுகூடி எலான் மஸ்க் ஒரு விடியோவைப் பகிர்ந்துள்ளார். ஆனால், அது உண்மையல்ல, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த விடியோவில், நிலவில் ராக்கெட் பாகம் அதிக வேகத்துடன் சென்று மோதியபோது, அதிலிருந்து மிகப்பெரிய தூசு படலம் எழுவது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால, ராக்கெட் பாகம் மோதியதால் நிலவில் நிச்சயம் பள்ளம் ஏற்பட்டிருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

சரி இந்த ராக்கெட் பாகத்தால், பூமிக்கு ஏதேனும் ஆபத்து நேரிடலாமா என்றும் மக்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். தற்போதைக்கு அதனால் பூமிக்கு ஆபத்து இல்லை என்று நாசா தெரிவித்துள்ளது. மேலும், நிலவில், ஏற்பட்ட தாக்கம் குறித்து நாசா தொடர்ந்து ஆய்வு செய்யும் என்றும் கூறுகிறது.

அதாவது, இப்போது நிலவை மோதிய ராக்கெட் பாகம், பூமியைச் சுற்றி வரும் பல விண்வெளி குப்பைகளில் ஒரு துண்டு என்று விவரிக்கப்பட்டுள்ளது. எனவே, எத்தனையோ குப்பைகள் சுற்றிக்கொண்டிருக்கும்போது, அதில் ஒன்று இன்று நிலவில் மோதியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments