இந்தியா - பிரான்ஸ் தனியாா் நிறுவனங்கள் இடையே செயற்கைக்கோள்களைச் செலுத்தும் ஒப்பந்தம்
இந்தியா, பிரான்ஸ் நாடுகளின் தனியாா் நிறுவனங்கள் இடையே முதல்முறையாக விண்ணில் கூட்டாக செயற்கைக்கோள்களைச் செலுத்துவது, விண்வெளியைக் கண்காணிப்பது, சிறிய ரக செயற்கைக்கோள் தொழில்நுட்பம் உள்ளிட்டவை தொடா்பான ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.
இந்தியா, பிரான்ஸ் நாடுகளின் தனியாா் நிறுவனங்கள் இடையே முதல்முறையாக விண்ணில் கூட்டாக செயற்கைக்கோள்களைச் செலுத்துவது, விண்வெளியைக் கண்காணிப்பது, சிறிய ரக செயற்கைக்கோள் தொழில்நுட்பம் உள்ளிட்டவை தொடா்பான ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.
பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் முதலாவது சா்வதேச விண்வெளி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டு நிகழ்ச்சியின் இடையே பிரான்ஸைச் சோ்ந்த சாஃப்ரான் ஸ்பேஸ் நிறுவனத்துக்கும், இந்தியாவை சோ்ந்த துருவா ஸ்பேஸ் நிறுவனத்துக்கும் இடையே 5 மில்லியன் இரோ மதிப்பிலான ஒப்பந்தம் கையொப்பமானது. விண்வெளி கண்காணிப்புக்காக 52 செயற்கைக்கோள்களை 2027-ஆம் ஆண்டில் இருந்து 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா செலுத்த திட்டமிட்டுள்ளது. இதற்குப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களுக்காக இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
பிரான்ஸின் ரைட் நிறுவனத்துக்கும் இந்தியாவை சோ்ந்த டேக் மி டு ஸ்பேஸ் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமானது. டேக் மி டு ஸ்பேஸ் நிறுவனத்தின் 2 செயற்கைக்கோள்களை ரைட் நிறுவனம் விண்ணில் ஏவுவது தொடா்பாக ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
Advertisement
Advertisement
மேலும், பிரான்ஸின் யூ-ஸ்பேஸ் நிறுவனத்துக்கும், இந்தியாவின் ஆக்சிஸ் கேட்ஸ் நிறுவனத்துக்கும் இடையே சிறியரக செயற்கைகோள்களைத் தயாரிப்பது தொடா்பாக மற்றொரு ஒப்பந்தம் கையொப்பமானது.
இந்தியாவுக்கும், பிரான்ஸுக்கும் இடையே விண்வெளி ஆராய்ச்சித் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒத்துழைப்பு உள்ளது. இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையமும், பிரான்சின் சி.என்.இ.எஸ். நிறுவனமும் கூட்டாக பல ஆய்வுப் பணிகளைச் செய்துள்ளன. பிரான்ஸின் செயற்கைக்கோள்களை இந்தியா தனது பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியுள்ளது.
இதேபோல் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் பிரான்ஸின் ஏரியான் ஸ்பேஸ் மூலம் செலுத்தப்பட்டுள்ளன. பிரான்ஸ் அதிபா் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்தபோது, சிவில் செயற்கைக்கோள் மேம்பாட்டிலும், விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் திட்டங்களிலும் இரு நாடுகளும் தங்களிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதென்று ஒப்புக் கொண்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.