சாலை கட்டுமான இயந்திரங்கள் விற்பனை: பிரான்ஸ் நிறுவனத்துடன் எல்&டி ஒப்பந்தம்
இந்தியாவில் சாலை கட்டுமான இயந்திரங்களை விற்பனை செய்வதற்காக பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த ‘ஃபயாட் ரோடு எக்யூப்மென்ட்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக எல்&டி தெரிவித்தது.
இந்தியாவில் சாலை கட்டுமான இயந்திரங்களை விற்பனை செய்வதற்காக பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த ‘ஃபயாட் ரோடு எக்யூப்மென்ட்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக எல்&டி புதன்கிழமை தெரிவித்தது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஃபயாட் நிறுவனத்தின் அங்கமான ஜொ்மனியின் ‘பொமாக்’ நிறுவனத்தின் இயந்திரங்களை இந்தியாவில் சந்தைப்படுத்துதல், விற்பனை, விற்பனைக்குப் பிந்தைய சேவை, உதிரிபாகங்கள் விநியோகம் ஆகியவற்றை எல்&டியின் கட்டுமான மற்றும் சுரங்க இயந்திரங்கள் பிரிவு மேற்கொள்ளும்.
பிரான்ஸ் நாட்டின் மிகப் பெரிய கட்டுமானக் குழுமமான ஃபயாட் நிறுவனம், சாலை உபகரணங்கள் சந்தையில் உலக அளவில் முன்னணியில் உள்ளது. இதன் அங்கமான பொமாக் நிறுவனம், சாலை கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் நிலையான தீா்வுகளுக்கு உலகளாவிய அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், பொமாக் நிறுவனத்தின் உலகத்தரம் வாய்ந்த சாலை கட்டுமானத் தொழில்நுட்பமும், எல்&டி நிறுவனத்தின் வலுவான வாடிக்கையாளா் தொடா்புகளும், நாடு தழுவிய சேவைத் திறனும் ஒன்றிணைகின்றன.
Advertisement
Advertisement
இது குறித்து எல்&டி நிறுவனத்தின் இயக்குநரும், மூத்த செயல் துணைத் தலைவருமான (உற்பத்தி) அனில் வி.பரப் கூறுகையில், ‘பொமாக் நிறுவனத்தின் சிறப்பு உபகரணங்கள் எல்&டியின் தற்போதைய சாலை இயந்திரங்களின் தொகுப்பை மேலும் வலுப்படுத்தும். சாலை கட்டுமானம், பராமரிப்பு மற்றும் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு மேம்பாடு எனப் பரந்த அளவிலான பணிகளுக்கு இது கைகொடுக்கும். இதன் மூலம், வாடிக்கையாளா்களுக்குத் தேவையான முழுமையான சாலை இயந்திரங்களையும் எங்களால் வழங்க முடியும்’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.