FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அபிராமியின் கணவர் விஜய்-க்கு ரஜினி மக்கள் மன்றத்தில் இணைச் செயலாளர் பதவி

குன்றத்தூரில் அபிராமியால் கொலை செய்யப்பட்ட 2 குழந்தைகளின் தந்தை விஜய்-க்கு ரஜினி மக்கள் மன்றத்தில் ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

குன்றத்தூரில் அபிராமியால் கொலை செய்யப்பட்ட 2 குழந்தைகளின் தந்தை விஜய்-க்கு ரஜினி மக்கள் மன்றத்தில் ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.  

கடலூர் மாவட்டம், குறிச்சிப்பாடியை சேர்ந்தவர் விஜய் (30). இவர் சென்னையில் தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். குன்றத்தூரில் வாடகை வீட்டில் மனைவி அபிராமி (27), மகன் அஜய் (7), மகள் காருணிகா (4) ஆகியோருடன் வசித்து வந்தார். 

இவருடைய மனைவி அபிராமி, சுந்தரம் எனும் ஓட்டல் ஊழியருடன் வாழ்வதற்காக இரண்டு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொலை செய்தார். இதையடுத்து, தப்பியோடிய அபிராமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

Advertisement

Advertisement

பெற்ற குழந்தைகளை இழந்து தவிக்கும் தந்தை விஜய் தனது தீவிர ரசிகர் என்பதால் நடிகர் ரஜினிகாந்த் அவரை போயஸ் கார்டன் இல்லத்திற்கு அழைத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

இந்நிலையில், அவர் ரஜினி மக்கள் மன்றத்தில் குன்றத்தூர் ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளராக வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments