FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு: அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைக்கிறார்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மூன்றாவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாட்டை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:


பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மூன்றாவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாட்டை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டை முன்னிட்டு வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பாரீசுக்கு அவர் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். 
புரிந்துணர்வு ஒப்பந்தம்: 
பிரான்ஸ் நாட்டின் முக்கிய மாநிலமான சென்ட்டர் வால்ட்டி லோரி', தமிழகத்துடன் பண்பாட்டு பரிமாற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த மாநிலத்துடன் பண்பாட்டு பரிமாற்றம் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழக அரசின் பண்பாட்டுத் துறை மேற்கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன் வெள்ளிக்கிழமை பங்கேற்கிறார். மேலும், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் அறிவித்த சொற்குவை திட்டம் தொடர்பாக பாரீசில் தமிழ் வல்லுநர்களையும் அவர் சந்திக்கிறார்.
மாநாடு தொடக்கம்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பிரான்ஸ் நாட்டு கிளையான பன்னாட்டு உயர் கல்வி நிறுவனம், செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனம், அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் மூன்றாவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாட்டை அவர் சனிக்கிழமை (செப்.8) தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் ஐரோப்பிய கண்டத்திலுள்ள 20 நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள், பேராசிரியர்கள் எனப் பலர் கலந்து கொள்கின்றனர். திருக்குறளை உலகின் நூலாக அறிவிக்கக் கோரும் விண்ணப்பத்தை யுனெஸ்கோ இயக்குநரிடம் அமைச்சர் அளிக்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments