தூத்துக்குடி துப்பாக்கிசூடு: விசாரணை ஆணைய கால அளவு நீட்டிப்பு
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசனின் விசாரணைக் கால அளவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசனின் விசாரணைக் கால அளவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பொதுத் துறையின் உத்தரவு தமிழக அரசிதழில்வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மே 22-ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பலர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு எழுந்த காரணம் மற்றும் சூழ்நிலை குறித்து விசாரணை செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த விசாரணை ஆணையத்தின் கால அளவை மே மாதத்தில் இருந்து 3 மாதங்கள் என்று தமிழக அரசு கால அளவை நிர்ணயித்திருந்தது. இந்த நிலையில் விசாரணை ஆணையத்தின் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.