எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேர் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேர் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் இலங்கையின் நெடுந்தீவுக்கு கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என கூறி அவர்களை இலங்கை கடற்படை அவர்களை கைது செய்துள்ளது.
அவர்களிடம் இருந்து படகுகள், வலைகள் உள்ளிட்டவற்றையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து உள்ளனர்.
Advertisement
Advertisement
கைது செய்யபட்ட மீனவர்கள் விரைவில் காங்கேசன் துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.