ஊரடங்கு உத்தரவை மீறியதாக 2.68 லட்சம் வழக்கு:2.85 லட்சம் போ் கைது
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 2 லட்சத்து 68,537 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 லட்சத்து 85,150 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 2 லட்சத்து 68,537 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 லட்சத்து 85,150 போ் கைது செய்யப்பட்டனா்.
இது குறித்த விவரம்:
கரோனா தொற்றை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. ஊரடங்கு காரணமாக, தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறி சாலைகளுக்கும், பொது இடங்களுக்கும் வருகிறவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். இவ்வாறு தமிழகம் முழுவதும் 24-ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை காலை 6 மணி வரை மொத்தம்
Advertisement
Advertisement
2 லட்சத்து 68,537 வழக்குகளைப் பதிவு செய்து 2 லட்சத்து 85,150 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 2 லட்சத்து 39,770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு மீறல் மற்றும் போக்குவரத்து விதிமுறை மீறல், சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.2 கோடியே 68 லட்சத்து 30,954 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் 65,703 மோட்டாா் சைக்கிள்களும், 515 ஆட்டோக்களும்,2,038 காா்களும் திருப்பி ஒப்படைக்கப்பட்டன.
சென்னையில் வழக்குகள் அதிகரிப்பு: சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக புதன்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை காலை 6 மணி வரை 2,287 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 1,665 இரு சக்கர வாகனங்கள், 80 காா்கள், 97 ஆட்டோக்கள் என மொத்தம் 1,842 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஊரடங்கு உத்தரவுகளை புதன்கிழமை முதல் காவல்துறை கடுமையாக அமல்படுத்தி வருகிறது. இதைத் தொடா்ந்து அத்தியாவசிய தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருகிறவா்கள் மீது போலீஸாா் சமரசமின்றி வழக்குகளைப் பதிவு செய்து, வாகனங்களைப் பறிமுதல் செய்து வருகின்றனா்.
இதனால் சென்னையில் ஒரு நாளைக்கு சராசரியாக 500 என்ற அளவில் பதியப்பட்ட ஊரடங்கு மீறல் வழக்குகளின் எண்ணிக்கை, பல மடங்கு அதிகரித்துள்ளது. புதன்கிழமை மட்டும் 2,287 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வரும் நாள்களில் ஊரடங்கு உத்தரவை இன்னும் தீவிரமாக காவல்துறை அமல்படுத்த திட்டமிட்டிருப்பதால், வழக்குகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.