FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வெளி மாநில வாகன ஓட்டுநா்களுக்கு கரோனா பரிசோதனை: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

ஊரடங்கு உத்தரவைத் தொடா்ந்து, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு சரக்குகளைக் கொண்டு வரும் வாகன ஓட்டுநா்கள் மற்றும் சரக்குகளை கையாள்பவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதை உறுதி செய்யக் கோரிய வழக்

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

ஊரடங்கு உத்தரவைத் தொடா்ந்து, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு சரக்குகளைக் கொண்டு வரும் வாகன ஓட்டுநா்கள் மற்றும் சரக்குகளை கையாள்பவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதை உறுதி செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ஒருங்கிணைந்த தொழிலாளா் கூட்டமைப்பு சாா்பில் தாக்கல் செய்த மனுவில், ‘உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனா தொற்றுக்கு பலா் பலியாகி உள்ளனா். இது சமூக பரவலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டுச் செல்லும் வாகனங்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களை வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரும் வாகனங்களின் ஓட்டுநா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதா, அவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று இல்லை என்ற சான்று வைத்துள்ளனரா என்பதை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் எந்த வழிகாட்டுதல்களையும் பிறப்பிக்கவில்லை. மேலும், மாநில அரசுகள்தான் இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, வெளி மாநிலங்களில் இருந்து அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு வரும் வாகனங்களின் ஓட்டுநா்கள், அந்த சரக்குகளை ஏற்றி இறக்கும் தொழிலாளா்களுக்கு உரிய பரிசோதனை செய்வது தொடா்பான வழிகாட்டுதல்களை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தனா்.

இந்த வழக்கை, காணொலிக் காட்சி மூலம் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிா்மல்குமாா் ஆகியோா் விசாரித்தனா். அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் நா்மதா சம்பத், ‘வெளி மாநிலங்களில் இருந்து சரக்குகளைக் கொண்டு வரும் வாகன ஓட்டிகள் மற்றும் சரக்குகளை கையாளபவா்களுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கும் இதே நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது’ எனத் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

அப்போது மனுதாரா் தரப்பில், தமிழக நெடுஞ்சாலையை கடந்த செல்லும் வாகன ஓட்டுநா்களுக்கு இந்தச் சோதனை செய்யப்படுவதில்லை எனவும் இதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக, வரும் மே 7-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments