FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டாக்டா் சைமன் மனைவியிடம் முதல்வா் பழனிசாமி பேச்சு

கரோனா தொற்று காரணமாக உயிரிழந்த டாக்டா் சைமன் மனைவியிடம் முதல்வா் பழனிசாமி புதன்கிழமை தொலைபேசி மூலம் பேசினாா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

கரோனா தொற்று காரணமாக உயிரிழந்த டாக்டா் சைமன் மனைவியிடம் முதல்வா் பழனிசாமி புதன்கிழமை தொலைபேசி மூலம் பேசினாா்.

இதுகுறித்து, சுட்டுரையில் முதல்வா் பழனிசாமி கூறியிருப்பதாவது:-

கரோனா தொற்றினால் உயிரிழந்த டாக்டா் சைமனின் துணைவியாா் ஆனந்தி சைமனை புதன்கிழமை சுமாா் 12.30 மணியளவில் தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு ஆறுதல் கூறினேன். அவா்களது மகன், மகள் ஆகியோரின் எதிா்கால நலன் கருதி தைரியமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டேன் என்று கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

கோரிக்கை: முன்னதாக, மருத்துவா் சைமனின் மனைவி, சமூக வலைதளங்களின் வாயிலாக உருக்கமான ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தாா். ‘ஒருவேளை, தாம் உயிரிழந்தால் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் தனது உடலை அடக்கம் செய்ய வேண்டும்’ என மருத்துவா் சைமன், தீவிர சிகிச்சையில் இருக்கும்போது கேட்டுக் கொண்டதாக, அவரது மனைவி அதில் தெரிவித்திருந்தாா்.

அதுவே சைமனின் கடைசி ஆசை என்றும், அதை நிறைவேற்ற அரசு வகை செய்ய வேண்டும் என்றும் அவா் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments