FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கால்நடைகளுக்கு நோய் பரவுவதை போர்க்கால அடிப்படையில் தடுக்கக் கோரிக்கை

அவிநாசி பகுதியில் கால்நடைகளுக்கு பரவிவரும் நோயினை போர்க்கால அடிப்படையில் தடுக்க வேண்டும் என அனைத்துக்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

Updated On : 7 ஜனவரி 2021, 5:38 pm IST
கால்நடைகளுக்கு நோய் பரவுவதை போர்க்கால அடிப்படையில் தடுக்கக் கோரிக்கை
பகிர்:


அவிநாசி: அவிநாசி பகுதியில் கால்நடைகளுக்கு பரவிவரும் நோயினை போர்க்கால அடிப்படையில் தடுக்க வேண்டும் என அனைத்துக்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் அவிநாசி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் பி. முத்துசாமி தலைமை வகித்தார். இதில் அவிநாசி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சிகளின் பெரும்பான்மையாக விவசாயம், கால்நடைகள், கோழிகள் வளர்ப்பு உள்ளிட்டவை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் தற்போது, கால்நடைகளுக்கு அம்மை நோய், பரவைக் காய்ச்சல் உள்ளிட்ட மர்ம நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் சோகத்தில் ஆழ்துள்ளனர். 

ஆகவே விரைவாக இந்நோய்களைத் தடுக்க போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர்கள் வெங்கடாசலம், ஈஸ்வரமூர்த்தி, பழனிச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் இசாக், காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் வழக்குரைஞர் கோபாலகிருஷ்ணன், சாய் கண்ணன், மணி, திமுக பொறுப்பாளர்கள்தி பழனிச்சாமி, சிவப்பிரகாஷ், பொன்னுச்சாமி, மதிமுக பொறுப்பாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments