முகப்பு
தமிழ்நாடு

கொடநாடு விவகாரத்தில் உண்மை என்ன?: சயனிடம் விசாரணை

நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயனிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Updated On : 17 ஆகஸ்ட் 2021, 3:48 pm IST
கொடநாடு விவகாரத்தில் உண்மை என்ன?: சயனிடம் விசாரணை
பகிர்:


நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயனிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சயன் ஆஜரானார். 

சயனிடம் விசாரணை நடத்துவதற்கு மாவட்ட கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்துள்ளார்.

Advertisement

Advertisement

கொடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டு பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

கொலையில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் 2017-ம் ஆண்டு விபத்தில் இறந்தார்.

கொடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராக இருந்த தினேஷ்குமாரும் தற்கொலை செய்துகொண்டார். 

காவலாளி கொலை வழக்கில் முக்கிய புள்ளியான சயன் குடும்பத்துடன் காரில் தப்பும்போது விபத்தில் சிக்கினார். 

இந்நிலையில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயனிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இதில் கடந்த ஆட்சியில் சயனை இயக்கியது யார் என்பது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகும் என வெளியான தகவல்களால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments