சருமத்தில் எண்ணெய்ப் பசை நீங்க.. இயற்கையான 'ஃபேஸ் பேக்'
சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை நீங்குவதற்கு பலரும் பல செயற்கை கிரீம்களை பயன்படுத்துவது வழக்கம்.
சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை நீங்குவதற்கு பலரும் பல செயற்கை கிரீம்களை பயன்படுத்துவது வழக்கம்.
ஆனால், வீட்டில் உள்ள எளிய பொருள்களை பயன்படுத்தியே எண்ணெய்ப் பசை சருமத்திற்கு தீர்வு காணலாம்.
தேவைப்படும் பொருள்கள்
Advertisement
Advertisement
- புதினா இலைச்சாறு
- எலுமிச்சை சாறு
- முல்தானிமட்டி
- ரோஸ் வாட்டர்
மேற்குறிப்பிட்ட இந்த நான்கையும் தலா ஒரு ஸ்பூன் எடுத்து கலந்துகொள்ளவும். இப்போது முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிவிட்டு சுத்தமான துணியால் துடைத்துவிடுங்கள்.
இப்போது இந்த பேக்கினை முகத்தில் அப்ளை செய்துவிட்டு ஒரு 15 நிமிடம் வரை காத்திருங்கள்.
முல்தானிமட்டி நன்றாக வறண்டுவிடாமல் லேசான ஈரப்பதம் இருக்கும்போது முகத்தை ஸ்க்ரப் செய்து கழுவுங்கள்.
இந்த கலவை சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசையை உறிஞ்சி சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவும்.
வாரத்திற்கு ஒருமுறை இவ்வாறு செய்துவரலாம்.
இதையும் படிக்க | புரோக்கோலி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.