முகப்பு
தமிழ்நாடு

சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு  'தகைசால் தமிழர்' என்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 28 ஜூலை 2021, 5:40 pm IST
சங்கரய்யாவின் நூறாவது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்
பகிர்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு  'தகைசால் தமிழர்' என்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் முகத்தான், "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்தாண்டிற்கான ‘தகைசால் தமிழர்’ என்ற விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், சுதந்திர தினவிழாவன்று சங்கரய்யாவுக்கு இவ்விருதினை வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவுரவிக்கவுள்ளார்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,

“தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும்
பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கவும், இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே ஆணையிட்டிருந்தார்கள்.

இவ்விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில், இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, மாணவத்தலைவராகவும், சுதந்திரப் போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றியதுடன், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி, சமீபத்தில் 100 வயதை அடைந்த தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், இவ்வாண்டிற்கான “தகைசால் தமிழர்” விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு, அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.

“தகைசால் தமிழர்” விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட என்.சங்கரய்யா அவர்களுக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கவுள்ளார்.”

கடந்த வாரம் 100வது பிறந்த நாளை கொண்டாடிய என். சங்கரய்யா, தனது கல்லூரி காலத்தில் சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்று சிறைக்கு சென்றுள்ளார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு பொறுப்பை வகித்துள்ள இவர் தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments