முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீமதி மரணம்: பள்ளி நிர்வாகிகளுக்கு சிறைக்காவல் நீட்டிப்பு

மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கனியாமூா் பள்ளித் தாளாளா் உள்பட 5 பேரின் சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 12 ஆகஸ்ட் 2022, 1:19 pm IST
பகிர்:

மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கனியாமூா் பள்ளித் தாளாளா் உள்பட 5 பேரின் சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13-ஆம் தேதி பள்ளியில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பள்ளியைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதனால் மாணவி இறந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் பள்ளித் தளாளா் ரவிக்குமாா், செயலா் சாந்தி, பள்ளி முதல்வா் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்து, சேலம் சிறையில் அடைத்தனா்.

கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் விழுப்புரம் மகளிா் நீதிமன்ற நீதிபதியிடம் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாணவி இறப்பு குறித்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் குழு ஆய்வு முடிவு கிடைக்காத நிலையில், 5 பேருக்கும் ஜாமீன் வழங்க வேண்டாம் என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்காக 5 பேரும்  காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுடைய காவலை நீட்டிக்க சிபிசிஐடி தரப்பில் முறையிடப்பட்டது. அதனால், விசாரணை முடிவில் பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் சிறைக்காவலை வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை நீட்டிக்க விழுப்புரம் மகளிா் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments