முகப்பு
தமிழ்நாடு

தற்காலிக ஆசிரியர் நியமனம்: தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு

தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. 

Updated On : 5 ஜூலை 2022, 11:40 am IST
கோப்புப்படம்
பகிர்:

தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக 13,331 ஆசிரியா் பணியிடங்களில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்தது.

ஆனால், இதில் சில முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், இது தொடர்பான வழக்கில், பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு இடைக்காலத்தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. தகுதி அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியதற்கு இணங்க, தமிழக பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர்கள் நியமனத்தில் திருத்தம் செய்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. 

Advertisement

Advertisement

எனினும் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக நீதிமன்றத் தடை இருப்பதால், அதனை விலக்க வேண்டும் என்று வழக்கின் இன்றைய விசாரணையில் தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது. 

இதையடுத்து நீதிபதிகள், தற்காலிக ஆசிரியர்களை ஏன் நியமிக்க வேண்டும்? அதில் என்ன அவசரம் இருக்கிறது?  பதிலாக நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கலாமே? என்று கூறி ஏற்கெனவே பட்டியலிடப்பட்ட ஜூலை 8 ஆம் தேதியே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி கூறியுள்ளார். 

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான விண்ணப்பம் நேற்று (ஜூலை 4) தொடங்கியுள்ளது. ஜூலை 6 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரைக்கிளை தடை விதித்துள்ளதால் மதுரைக்கிளையின் கீழ் உள்ள மாவட்டங்களில் ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத சூழல் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.