அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு கரோனா
அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று காலை சட்டப்பேரவை முன்னாள் தலைவர் தனபாலுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது முன்னாள் அமைச்சருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
கடந்த 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் ஈபிஎஸ் இல்லத்தில் நடந்த ஆலோசனை கூட்டங்களில் கடம்பூர் ராஜு பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.