முகப்பு
தமிழ்நாடு

வண்டலூரில் வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்களுக்கு  பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் வண்டலூரில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து, வேலைவாய்ப்பினை பெற்ற இளைஞர்களுக்கு  பணிநியமன

Updated On : 20 மார்ச் 2022, 12:50 pm IST
பகிர்:

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் வண்டலூரில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து, வேலைவாய்ப்பினை பெற்ற இளைஞர்களுக்கு 
பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.20) செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்து, இம்முகாமில் வேலைவாய்ப்பினை பெற்ற இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.  

இவ்வேலைவாய்ப்பு முகாமில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர்  மற்றும் பிற மாவட்ட இளைஞர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.  

Advertisement

Advertisement

இம்முகாமில் 500க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்றனர். இந்நிறுவனங்களால் 73,950 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் 20 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இம்முகாம், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் ஒருங்கிணைப்புடன் உணவு, குடிநீர், சுகாதாரம், பாதுகாப்பு வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகளுடன் நடத்தப்பட்டது. அத்துடன் மகளிர் திட்டத்தின் கீழ் சுயஉதவி குழு அரங்கும் அமைக்கப்பட்டிருந்தது.  

மேலும், திறன் பயிற்சி மேற்கொள்வதற்கான பதிவுகள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாகவும், அயல்நாட்டு வேலைக்கான பதிவுகள் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வாயிலாகவும், தொழிற் பழகுநர் பயிற்சிக்காக பதிவு செய்வதற்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் பயிற்சி பிரிவின் வாயிலாகவும் மேற்கொள்வதற்கு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.  

அத்துடன், தொழில் நெறி வழிகாட்டல் வழங்குவதற்கென மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தினால் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.   

மே 2021 முதல் இதுவரை 36 பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களும், 297 சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இதில் 5,708  நிறுவனங்களும், 2,50,516 வேலைநாடுநர்களும் பங்கேற்றதில் 41,213 வேலைநாடுநர்கள் பல்வேறு துறைகளில் பணிநியமனம் பெற்றுள்ளனர். இதில் 517  மாற்றுதிறனாளிகளும் அடங்குவர்.

முதல்வர் விழா மேடையில், கல்வித் தொலைக்காட்சி வாயிலாக, அரசுப் பணிகளுக்காக பல்வேறு தேர்வு முகமைகளால் நடத்தப்படும். போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்குத் தேவையான பயிற்சிக்கான ஒளிபரப்பினை தொடங்கி வைத்தார்.  

இப்பயிற்சி வகுப்பு அன்றாடம் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், அதன் மறு ஒளிபரப்பு  இரவு 7  மணி முதல்  9  மணி வரையும்  ஒளிபரப்படும். 

இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், சட்டப்பரேவை உறுப்பினர்கள், எஸ்.ஆர்.ராஜா, எஸ்.அரவிந்த் ரமேஷ்,   எஸ்.எஸ்.பாலாஜி, திரு.இ.கருணாநிதி, திரு.எழிலரசன், தாம்பரம் மாநகராட்சி மேயர் திருமதி க. வசந்தகுமாரி, துணை மேயர் திரு. கோ. காமராஜ், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயலாளர் ஆர். கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநர் கொ. வீர ராகவ ராவ், இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர. ராகுல் நாத், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments