மதுரையில் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில், அடித்துக் கொண்ட இரு ரயில்வே சங்க நிர்வாகிகள். 
தமிழ்நாடு

மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் சங்க நிர்வாகிகள் அடிதடி

மதுரையில் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில், இரு ரயில்வே சங்க நிர்வாகிகள் அடித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

DIN


மதுரையில் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில், இரு ரயில்வே சங்க நிர்வாகிகள் அடித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

'சதர்ன் ரயில்வே எம்ப்ளாயீஸ் சங்கம்' எனப்படும், எஸ்.ஆர்.இ.எஸ்., நிர்வாகிகள் நாகேந்திரன், கணேசன். டிராக் மேன்களாக பணியாற்றும் இவர்களுக்கு, பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. 

இதற்கு 'சீனியாரிட்டி அடிப்படையில் பணிமாறுதல் வழங்க வேண்டும்' என, எஸ்.ஆர்.எம்.யூ., சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. 

இதையடுத்து, மாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக, ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில், இரண்டு சங்கங்களின் நிர்வாகிகளும் நேற்று அடிதடியில் ஈடுபட்டனர்; சிலருக்கு காயம் ஏற்பட்டது.

மோதல் குறித்து விசாரணை நடத்த, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அணுசக்தி திட்டம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு

லாட்டரி விற்றவா் கைது

தேசிய தற்காப்புக்கலை, யோகா போட்டிகள் 1900 மாணவ- மாணவிகள் பங்கேற்பு

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்! இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

வேளாங்கண்ணிக்கு மும்பையிலிருந்து சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT