தமிழ்நாடு

நீட் பயிற்சி மையத்திலிருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி!

DIN

திருப்பூர்: திருப்பூரில் நீட் பயிற்சி மையத்தின் 3 ஆவது மாடியில் இருந்து குதித்த 16 வயது மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் தனியார் நீட் கோச்சிங் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் படியூரைச் சேர்ந்த கட்டட மேஸ்திரியின் மகள் படித்து வந்தார்.

இந்தநிலையில், ஆனந்தி வழக்கம்போல் பயிற்சி மையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளார். இதன் பிறகு பயிற்சி மையத்தின் 3 ஆவது மாடிக்குச் சென்ற ஆனந்தி அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில், பலத்த காயமடைந்த மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரது தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT