கூடுவாஞ்சேரியில் கனமழை: மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிப்பு
கூடுவாஞ்சேரியில் வியாழக்கிழமை இரவு பெய்த மழை காரணமாக மூன்று மின் கம்பங்கள் சரிந்து விழுந்து மின் துண்டிப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டில் நாராயணபுரம் பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த மழை காரணமாக மூன்று மின் கம்பங்கள் சரிந்து விழுந்து மின் துண்டிப்பு ஏற்பட்டது.
இதனால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின் துண்டிப்பை அடுத்து, மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். நேற்று இரவு முதல் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து தகவலறிந்த 18-வது வார்டு நகரமன்றத் தலைவர் கண்ணன் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் மற்றும் மின் வாரிய ஊழியர்கள், கம்பம் விழுந்த இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து உடைந்து விழுந்த மூன்று மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.