முகப்பு
தமிழ்நாடு

மதுரை மாவட்டத்தில் விடிய விடிய இடி மின்னலுடன் கூடிய கனமழை!

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. 

Updated On : 9 அக்டோபர் 2022, 10:11 am IST
பகிர்:


மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. 

தெற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில்  இரண்டு நாள்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு  மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. 

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெயிலின் காரணமாக வெப்பமான சீதோசன நிலை இருந்து வந்தது. 

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு பெய்த மழையால் மாவட்டத்தின் பல பகுதிகளில் குளிர்ந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments