மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,000 கனஅடியாக சரிவு
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக சரிந்தது.
மேட்டூர்: காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக சரிந்தது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்ததால் செவ்வாய்க்கிழமை மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக சரிந்தது. புதன்கிழமை காலை 2 ஆவது நாளாக நீர்வரத்து 30,000 கன அடியாக தொடர்ந்தது. அணைக்க வரும் நீரின் அளவு சரிந்ததால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 30,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அணுக் கழிவு ஆயுதங்கள் தயாரிப்பு: உக்ரைன் மறுப்பு
Advertisement
Advertisement
நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 8,500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.