முகப்பு
தமிழ்நாடு

தமிழ்வழி மருத்துவப் படிப்புக்கான பாடத்திட்டம் மொழிபெயர்ப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழில் மருத்துவம் பயிற்றுவிக்க பாடத் திட்டம் மொழி பெயர்ப்பு பணி நடந்து வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Updated On : 31 அக்டோபர் 2022, 1:04 pm IST
பகிர்:

தமிழில் மருத்துவம் பயிற்றுவிக்க பாடத் திட்டம் மொழி பெயர்ப்பு பணி நடந்து வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்று ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

மேலும், ஸ்டான்லி மருத்துவமனையில் முழுஉடல் பரிசோதனை மையத்திற்கான இணையதள முகவரி அமைச்சர் திறந்து வைத்தார்.

Advertisement

Advertisement

ஹிந்தியில் மருத்துவம் கற்றுக்கொடுப்பது போன்று தமிழிலும் கற்றுக்கொடுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தமிழில் மருத்துவம் பயிற்றுவிக்க பாடத் திட்டம் மொழி பெயர்ப்பு பணி நடந்து வருகிறது. முதலாம் ஆண்டு பாடப்புத்தகத்திற்கான  மொழி பெயர்ப்பு பணி நடந்துவருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் தெரிவித்துள்ளார்.

தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிபேட்டை  உள்பட 6 இடங்களில் மருத்துவ கல்லூரிகள் நிறுவ முன் அனுமதி கேட்டுள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மருத்துவ கல்லூரிகள் நிறுவ அனுமதி கிடைத்தவுடன், தமிழ்வழி மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments