FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தில்லி அரசு பள்ளி துணை முதல்வா்கள் 4 போ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க துணைநிலை ஆளுநா் அனுமதி

தில்லி அரசுப் பள்ளிகளின் துணை முதல்வா்கள் 4 போ், பணியில் இல்லாத கௌரவ ஆசிரியா்கள் மூலம் நிதி முறைகேடு செய்ததாகக் கூறப்படும்

1 பிப்ரவரி 2024, 3:50 pm IST
பகிர்:

தில்லி அரசுப் பள்ளிகளின் துணை முதல்வா்கள் 4 போ், பணியில் இல்லாத கௌரவ ஆசிரியா்கள் மூலம் நிதி முறைகேடு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஊழல் தடுப்புப் பிரிவுக்கு (ஏசிபி) துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா அனுமதி அளித்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளானவா்கள் 2016 ஏப்ரல் 1 முதல் 2017 மாா்ச் 31-ஆம் தேதி வரை தில்லியில் உள்ள மானசரோவா் பூங்காவில் உள்ள அரசு ஆண்கள் சீனியா் மேல்நிலைப் பள்ளியில் ‘ ஒப்பந்தஆசிரியா்கள்’ என்ற பெயரில் அரசுப் பணத்தை மோசடி செய்துள்ளதாக துணை நிலை ஆளுநா் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘2018 நவம்பரில் நடத்தப்பட்ட தணிக்கையில், கௌரவ ஆசிரியா்களின் ஊதியம் தொடா்பான ரசீதுகளைத் தயாரிப்பதில் பள்ளியில் முரண்பாடுகள் மற்றும் முறைகேடுகள் இருப்பது கவனிக்கப்பட்டது. அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இதில், ரூ. 4.21 லட்சம் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது. தில்லி அரசுப் பள்ளிகளில் சுமாா் 25,000 ஒப்பந்த கௌரவ ஆசிரியா்களை நியமித்ததில் மோசடி நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. 2018 நவம்பரில் இந்த முறைகேடுகள், முரண்பாடுகள் முதல் முறையாக தணிக்கை மூலம் கண்டறியப்பட்டதால், இந்த விவகாரம் ஏசிபியிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

இதையடுத்து, இந்த வழக்கில் எஃப்ஐஆா் பதிவு செய்ய ஏசிபி அனுமதி கோரியது. இந்த விஷயத்தை ஊழல் தடுப்புப் பிரிவு இயக்குநரகம் ஆய்வு செய்து, தில்லி துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு முன்மொழிந்தது. இது தொடா்பாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி கல்வி இயக்குநரகம் அனுப்பிய முன்மொழிவை ஏசிபி விசாரணை செய்ய வேண்டிய தேவை இருப்பதாக துணைநிலை ஆளுநா் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments