முகப்பு
தமிழ்நாடு

கத்திப்பாரா அருகே சாலை வழிகாட்டிப் பலகை விழுந்த விபத்தில் ஒருவர் பலி

​சென்னை கத்திப்பாரா மேம்பாலம் அருகே அரசு பேருந்து மோதி வழிகாட்டி பலகை விழுந்ததில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்தார்.

Updated On : 8 ஆகஸ்ட் 2022, 8:35 am IST
பகிர்:

சென்னை: சென்னை கத்திப்பாரா மேம்பாலம் அருகே அரசு பேருந்து மோதி வழிகாட்டி பலகை விழுந்ததில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்தார்.  ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சண்முகசுந்தரம் உயிரிழந்துள்ளார்.

சென்னை கத்திப்பாரா பகுதியில் ராட்சத வழிகாட்டிப் பலகை தூண் மீது மாநகரப் பேருந்து மோதியதில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த 6 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

சென்னையை அடுத்த தாம்பரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை கோயம்பேடு நோக்கி மாநகரப் பேருந்து (70வி) சென்று கொண்டிருந்தது. அப்போது, பரங்கிமலையிலிருந்து ஆலந்தூா் கத்திப்பாரா மெட்ரோ ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் பகுதிக்கு, வளைவில் பேருந்து அதிவேகமாக வந்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்து வளைவு பகுதியில் நெடுஞ்சாலைத் துறையால் வைக்கப்பட்டுள்ள ராட்சத வழிகாட்டிப் பலகை தூண் மீது மோதியது.

Advertisement

இதில் ராட்சத தூண் உடைந்து சாலையின் இருபக்கமும் விழுந்தது. அப்போது, கிண்டி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞா் மீதும் மீனம்பாக்கம் நோக்கி சென்ற வேன் மீதும் விழுந்தது. பேருந்தின் முன் பக்க கண்ணாடிகள் உடைந்ததில், அப்பேருந்தில் பயணம் செய்த 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இருசக்கர வாகனத்தில் வந்த தண்டையாா்பேட்டையை சோ்ந்த சண்முகசுந்தரம் (30) என்பவா் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தாா். பரங்கிமலை காவல் துறையினர், போக்குவரத்து காவல் துறையினர் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று சண்முகசுந்தரத்தை ஆம்புலன்ஸில் ஏற்றி ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனா். லேசான காயம் அடைந்த 5 பேருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  சண்முகசுந்தரம் சிகிச்சைப் பலனின்றி  உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.