முகப்பு
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணையிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு 3,147 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Updated On : 22 ஜூன் 2022, 9:32 am IST
கிருஷ்ணகிரி அணை
பகிர்:

 
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,  அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு 3,147 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி அணை கட்டப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடகம் மற்றும் ஆந்திரம் மாநிலங்களில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  

புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கிருஷ்ணகிரி அணைக்கு  வினாடிக்கு 2,563 கன அடியாக உயர்ந்தது. அணையின் மொத்த நீர்மட்டம் 52 அடி ஆகும். தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து அணையின் நீர்மட்டம் 50.25 அடியாக உயர்ந்துள்ளது.  அன்னையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை வினாடிக்கு 3,147 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  

கூடுதல் தண்ணீர் திறப்பு குறித்து தருமபுரி, திருவண்ணாமலை,விழுப்புரம், கடலூர்  ஆகிய மாவட்டங்களின் நிர்வாகத்திற்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.  

கிருஷ்ணகிரி அணையிலிருந்து கூடுதலாக உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி அணை அருகே உள்ள பாலம் நீரில் மூழ்கி உள்ளது.  

இதையொட்டி, கிருஷ்ணகிரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.