FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திருச்சி ஜமால் முகமது கல்லூரி முப்பெரும் விழா: முதல்வர் பங்கேற்பு

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முப்பெரும் விழாவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக பங்கேற்று, விழாவினைத் தொடங்கி வைத்தார். 

Updated On : 26 ஜூன் 2022, 10:49 am IST
பகிர்:


திருச்சி: திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முப்பெரும் விழாவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக பங்கேற்று, விழாவினைத் தொடங்கி வைத்தார். 

பின்னர்  "குளோபல் ஜமாலியன்ஸ் பிளாக்'' கட்டடத்திற்கான  அடிக்கல்லையும் அவர் நாட்டினார்.

முப்பெரும் விழா

Advertisement

Advertisement

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில், கல்லூரி நிறுவனர் நாள் விழா, கல்லூரி வரலாற்றைத் தொகுக்கும் பெருந்திட்டத் தொடக்கவிழா, "குளோபல் ஜமாலியன்ஸ் பிளாக்" கட்டட அடிக்கல் நாட்டு விழா என முப்பெரும் விழா, கல்லூரியின் அப்துல் கஃபூர் குளிர்மை அரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

அமைச்சர்கள் பங்கேற்பு

இவ்விழாவில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேரா . கே.எம். காதர் மொகிதீன், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ம. செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். இஸ்மாயில் முகைதீன் வரவேற்புரையாற்றினார். விழாவின் இறுதியாக கல்லூரியின் முனைவர் ஏ. முகமது இப்ராஹிம் நன்றி கூறினார்.

இவ்விழாவில் கல்லூரியின் முன்னாள், இந்நாள் பேராசிரியர்கள், முன்னாள், இந்நாள் மாணவ, மாணவியர் என 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments