FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஒசூர் மேயரானார் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ. சத்யா

ஒசூர் மாநகராட்சி மேயராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் ஒசூர் மாநகர திமுக பொறுப்பாளருமான எஸ்.ஏ.சத்யா தேர்வு செய்யப்பட்டார்.

Updated On : 4 மார்ச் 2022, 12:08 pm IST
ஓசூர் மேயராக தேர்வு செய்யப்பட்ட எஸ்.ஏ.சத்யாவிற்கு மாவட்ட செயலாளர் ஓசூர் எம்எல்ஏ ஒய். பிரகாஷ் வாழ்த்து தெரிவித்தார்
பகிர்:

ஒசூர்: ஒசூர் மாநகராட்சி மேயராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் ஒசூர் மாநகர திமுக பொறுப்பாளருமான எஸ்.ஏ.சத்யா தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த  பிப்.19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. ஒசூர் மாநகராட்சியில் 45 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் 21  மாமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

எஸ்.ஏ.சத்யா

அதிமுக சார்பில் 16 பேரும் பாஜக, பாமக, காங்கிரஸ் தலா ஒருவர் மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டனர். சுயேட்சைகள் 5 பேர் மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டனர். பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் வெற்றி பெற்ற கையோடு திமுகவில் இணைந்தார். சுயேட்சைகள் 5 பேரும் திமுகவில் இணைந்தனர். காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருடன் சேர்த்து 28 பேர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Advertisement

Advertisement

அதிமுக சார்பில் 16 பேரும் பாஜக சார்பில் ஒருவரும் என 17 பேர் அதிமுகவுக்கு ஆதரவாக இருந்தனர். இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை மேயர் தேர்தல் நடைபெற்றது

இந்த தேர்தலில் மேயராக திமுக சார்பில் எஸ். ஏ.சத்யாவும், அதிமுக சார்பில் எஸ் நாராயணன் போட்டியிட எஸ்ஏ சத்யா 27 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ். நாராயணன் 18 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments