முகப்பு
தமிழ்நாடு

குடியாத்தம் அருகே தண்ணீர் தொட்டியில் மூச்சுத் திணறி இருவர் பலி

புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டடில், தண்ணீர் தொட்டியில் சென்ட்ரிங் பிரிக்கும் போது மூச்சுத் திணறி இருவர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

Updated On : 13 நவம்பர் 2022, 10:30 am IST
பகிர்:

புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டடில், தண்ணீர் தொட்டியில் சென்ட்ரிங் பிரிக்கும் போது மூச்சுத் திணறி இருவர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பேரணாம்பட்டு இஸ்லாமியர் பள்ளி தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் கட்டட தொழிலாளர்கள் வெங்கடேசன், முருகன், மேலும் இரு செண்டரிங் பிரிக்கும்  வேலை செய்து வந்தனர்.

அப்போது  வீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் தண்ணீர் தேக்கி வைக்கும் டேங்கில் செண்டரிங் பிரிப்பதற்காக வெங்கடேசன்( 50), முருகன்( 44) தண்ணீர் தொட்டியில் இறங்கிய நிலையில், இருவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. பின்னர் மேலும் ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது

Advertisement

Advertisement

மயங்கி விழுந்த மூன்று பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் மற்றும் முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் முருகன் என்பவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் குறித்து பேர்னாம்பட்டு காவல் துறையினர்  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments