தமிழ்வழியில் மருத்துவப் படிப்பு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழ் வழியில் மருத்துவப் படிப்பு துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ் வழியில் மருத்துவப் படிப்பு துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கிவைத்தார். ஸ்டான்லி மருத்துவமனையில் முழுஉடல் பரிசோதனை மையத்திற்கான இணையதளத்தையம் தொடங்கிவைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் வழியில் மருத்துவக் கல்லூரி துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழில் மருத்துவப் படிப்புக்கான முதலாம் ஆண்டு பாடத் திட்டம் மொழிபெயர்ப்புப் பணிகள் கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது. அதன்படி, 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும்' என்று கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
ஏற்கெனவே தமிழகத்தில் பொறியியல் படிப்புகள் தமிழ் வழியில் கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.