FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கபாலீஸ்வரர் கோயிலில் கூட்டம்: பாஜக கவுன்சிலர் மீது வழக்கு

கபாலீஸ்வரர் கோயிலில் அனுமதியின்றி கூட்டம் நடத்திய புகாரில்  பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

1 பிப்ரவரி 2024, 3:51 pm IST
கோப்புப்படம்
பகிர்:

கபாலீஸ்வரர் கோயிலில் அனுமதியின்றி கூட்டம் நடத்திய புகாரில்  பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அனுமதியின்றி பொது இடத்தில் கூட்டம் கூடுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்து உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கடந்த மாதம் 31-ல் பாஜக சார்பில் நடந்த கூட்டம் பற்றி கோயில் நிர்வாகம் அளித்த புகாரில் மயிலாப்பூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சட்டவிரோதமாக கூட்டம் கூடியது தொடர்பாக பாஜக கவுன்சிலர் உமா ஆனந்துக்கு காவல் துறை சம்மன் அணுப்பியுள்ளது. 

உமா ஆனந்த் உள்பட 6 பேர் இன்று மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் தர காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments