FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பரோட்டா சாப்பிட்ட மாணவன் மாரடைப்பால் பலி!

கோவையில் இரவில் பரோட்டா சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்ற கல்லூரி மாணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 22 டிசம்பர் 2023, 1:56 pm IST
ஹேமச்சந்திரன்
பகிர்:

கோவையில் இரவில் பரோட்டா சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்ற கல்லூரி மாணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன். இவர் கோவை மாவட்டம் சூலூரில் தங்கி அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.

இதனிடையே நேற்று இரவு ஹேமச்சந்திரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பரோட்டா சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

தொடர்ந்து, தனது அறைக்குச் சென்ற மாணவர் ஹேமச்சந்திரன் இன்று காலை அசைவின்றி இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹேமச்சந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சூலூர் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சூலூர் காவல் துறையினர் மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் நேற்று 13 வயது சிறுமி பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கையில் மாரடைப்பால் உயிரிழந்த சூழலில், கோவையில் பரோட்டா சாப்பிட்டுவிட்டு உறங்கிய கல்லூரி மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு பலியான சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments