முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடி மாவட்ட தாமிரவருணி கரையோர மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

தூத்துக்குடி மாவட்ட தாமிரவருணி கரையோர மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 30 டிசம்பர் 2023, 11:40 am IST
கோப்புப்படம்
பகிர்:

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட தாமிரவருணி கரையோர மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து உபரி நீர் தாமிரவருணி ஆற்றில் வெளியேற்றப்பட்டும், அதிகப்படியான மழை நீர் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் அணைக்கட்டிற்கு சுமார்  10,100 கன அடி நீர்  வந்து கொண்டிருக்கிறது.  

மேலும், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே,  மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள்,  கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரவருணி ஆற்றங்கரையோர  கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்குமாறு  எச்சரிக்கப்படுகிறார்கள்.

Advertisement

Advertisement

மேலும், தாமிரவருணி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்காதவாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணித்திட ஸ்ரீவைகுண்டம், ஏரல் மற்றும் திருச்செந்தூர் வட்டாட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர்  கோ. லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments