தமிழ்நாடு

குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

DIN

குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில், நாட்டின் 74-வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் வெகு விமர்சையாக குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தன்று நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், விருதுநகரில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 

உதவி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். 

தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காதது குறித்து அந்த அறிவிப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

234 தொகுதிகளிலும் விஜய்யின் முகம் மட்டுமே!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 36 காசுகள் சரிந்து ரூ. 90.70 ஆக நிறைவு!

ராஞ்சியில் 6ஆவது மாடியில் இருந்து குதித்து தொழிலதிபர் தற்கொலை!

வலை டீசர்!

யு19 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா!

SCROLL FOR NEXT