முகப்பு
தமிழ்நாடு

கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வில் சீன பானை ஓடு கண்டெடுப்பு!

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருகேயுள்ள மாளிகைபுரம் கிராமத்தில் நடைபெற்று வரும் 3 ஆம் கட்ட அகழாய்வுப் பணியில் சீன பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜூன் 2023, 4:41 pm IST
கோப்புப்படம்
பகிர்:

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருகேயுள்ள மாளிகைபுரம் கிராமத்தில் நடைபெற்று வரும் 3 ஆம் கட்ட அகழாய்வுப் பணியில் சீன பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 11 ஆம் நூற்றாணடைச் சேர்ந்த சீன நாட்டின் பீங்கான், துண்டு காசுகளை உருவாக்கும் அச்சு சுடுமண் முத்திரையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சீனாவுடன் தமிழகம் வணிகத் தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

கங்கை கொண்ட சோழபுரம் அடுத்த மாளிகைமேடு கிராமத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி முதல் 3 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் அண்மையில் நடைபெற்ற பணியின்போது, செங்கற்கல்லால் ஆன வாய்க்கால் போன்ற அமைப்பு கண்டறியப்பட்டது

இந்த வாய்க்கால் போன்ற அமைப்பு கிழக்கு மேற்காக 315 செ.மீ நீளம், 45 செ.மீ அகலம் கொண்டதாக உள்ளது. மேலும், வாய்க்கால் நீளம் எவ்வளவு உள்ளது எனக் கண்டறியும் பணி தொடா்ந்து நடைபெற்று வருவதாக தொல்லியல் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments