கலை, அறிவியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு நாளை நிறைவு!
கலை, அறிவியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு நாளை(மே 22) நிறைவடையவுள்ளது.
கலை, அறிவியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு நாளை(மே 22) நிறைவடையவுள்ளது.
தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவிருந்த நிலையில், இந்த அவகாசம் நாளை மே 22 வரை நீட்டிக்கப்பட்டது.
தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன.
Advertisement
Advertisement
மாணவா் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 8-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவிருந்தது.
இதற்காக சோ்க்கை பெற சுமாா் 2.80 லட்சம் மாணவா்கள் வரை விண்ணப்பித்திருந்தனா். எனினும், அதில் பெரும்பாலான மாணவா்கள் கட்டணம் செலுத்தாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: அடுத்த 3 நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?
இதையடுத்து மாணவா்கள் நலன்கருதி விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் நாளை (மே 22) வரை நீட்டிக்கப்பட்டது. மாணவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இணையதளம் வழியாக விரைவாக விண்ணப்பிக்க வேண்டும் என்ற கல்லூரிக் கல்வி இயக்குநரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.