முகப்பு
தமிழ்நாடு

பெண் பார்க்கச் சென்றபோது தந்தை, மகன் பலி! டிப்பர் லாரி மோதியது!!

இலுப்பூர் அருகே  மகனுக்கு பெண் பார்க்க சென்ற தந்தை, மகன் டிப்பர் லாரி மோதி பலியாகினர்.

Updated On : 24 மே 2023, 3:44 pm IST
கோப்புப்படம்
பகிர்:

விராலிமலை: இலுப்பூர் அருகே  பெண் பார்க்கச் சென்றபோது தந்தை, மகன் டிப்பர் லாரி மோதி பலியாகினர்.

இலுப்பூர் அருகே அடையாளம் தெரியாத டிப்பர் லாரி இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தை, மகன் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள கடம்பராயன்பட்டி உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் பழனியாண்டி(65), சத்யகுமார்(30) தந்தை மகனான இவர்கள், கடந்த 20 ஆம் தேதி மகன் சத்யகுமாரின் திருமணத்திற்கு பெண் பார்பதற்கு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு இலுப்பூர் வழியாக மணப்பாறைக்கு சென்றுள்ளனர். 

Advertisement

Advertisement

வண்டியை சத்யகுமார் ஓட்டியுள்ளார். இருசக்கர வாகனம் இலுப்பூர் அருகே உள்ள மேட்டுச்சாலை எனும் இடத்தின் அருகே சென்ற போது அவ்வழியே வேகமாக வந்த அடையாளம் தெரியாத டிப்பர் லாரி இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. 

இவ்விபத்தில் பலத்த காயமடைந்த இருவரையும் அவ்வழியே சென்றவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் கடந்த சில நாள்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று இருவரும் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை உயிரிழந்தனர். 

இது குறித்து வழக்குப் பதிந்த இலுப்பூர் காவல் துறையினர் இருவரின் சடலங்களையும் உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை, அப்பகுதி சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments