FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நாமக்கல் அருகே வழக்குரைஞர் வெட்டிக்கொலை

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வழக்குரைஞர் வெள்ளிக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா்.

Updated On : 4 நவம்பர் 2023, 9:04 am IST
வழக்குரைஞர் மணிகண்டன்
பகிர்:

நாமக்கல்: நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வழக்குரைஞர் மணிகண்டன் வெள்ளிக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே வரகூரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(42). வழக்குரைஞரான இவர், வெள்ளிக்கிழமை இரவு எருமப்பட்டி-கஸ்தூரிபட்டி பிரிவு சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார் அங்கு சென்று மணிகண்டன் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை தொடர்பாக காவல் ஆய்வாளர் சுமதி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கொலை செய்த மர்ம நபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments