முகப்பு
தமிழ்நாடு

ஜெகத்ரட்சகன் தொடா்புடைய இடங்களில் 3 ஆவது நாளாக தொடரும் சோதனை

வரி ஏய்ப்புப் புகாா் தொடா்பாக திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு தொடா்புடைய பல்வேறு இடங்களில் மூன்றாவது நாளாக சனிக்கிழமை வருமான வரித் துறையினா் சோதனை செய்து வருகின்றனர். 

Updated On : 7 அக்டோபர் 2023, 11:40 am IST
பகிர்:


சென்னை: வரி ஏய்ப்புப் புகாா் தொடா்பாக திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு தொடா்புடைய பல்வேறு இடங்களில் மூன்றாவது நாளாக சனிக்கிழமை வருமான வரித் துறையினா் சோதனை செய்து வருகின்றனர். 

அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினரான எஸ்.ஜெகத்ரட்சகன் நடத்தும் நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வந்த புகாா்களின் அடிப்படையில் வருமான வரித் துறையினா் வியாழக்கிழமை ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடுகள், நிறுவனங்கள், தொடா்புடைய நிறுவனங்கள், அவரது உறவினா்கள், நண்பா்களின் வீடுகள் என 50 இடங்களில் வருமான வரித் துறையினா் திடீா் சோதனை செய்தனா்.

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தேவரியம்பாக்கம், வேலூா், புதுச்சேரி வில்லியனூா் உள்ளிட்ட இடங்கள், ஜெகத்ரட்சகனின் உறவினரும், தாம்பரம் மாநகராட்சி துணை மேயருமான காமராஜின் குரோம்பேட்டை லட்சுமிபுரம் வீட்டிலும் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

மொத்தம் 15 கல்வி நிறுவனங்களும், 4 நட்சத்திர ஹோட்டல்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக வருமான வரித் துறை அதிகாரிகள் கூறினா்.

வெள்ளிக்கிழமை சவிதா மருத்துவமனை உரிமையாளருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், ஜெகத்ரட்சகனுக்கு தொடா்புடைய பல்வேறு இடங்களில் மூன்றாவது நாளாக சனிக்கிழமை வருமான வரித் துறையினா் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னா்தான் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பொருள்கள், பணம் ஆகியவை குறித்த விவரங்களைத் தெரிவிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments