முகப்பு
தமிழ்நாடு

பேரிடர் ஒத்திகை: சிறப்பு ஒலியுடன் செல்லிடபேசிகளுக்கு வரும் குறுந்தகவல்

சிறப்பு ஒலியுடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் செல்லிடபேசிகளுக்கு குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:11 AM
பகிர்:

சென்னை: பேரிடர் காலத்தில் மக்களுக்கு அவசரநிலையை தெரியப்படுத்துவதற்கான சோதனை முயற்சியாக, சிறப்பு ஒலியுடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் செல்லிடபேசிகளுக்கு குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

அபாய ஒலியுடன் செல்லிடபேசிகளுக்கு முதலில் ஆங்கிலத்தில் குறுந்தகவல் அனுப்பப்பட்டு, பிறகு அந்த குறுந்தகவலின் ஆடியோவும் ஒலிக்கிறது. சிறிது நேரத்தில் தமிழில் அதே சிறப்பு ஒலியுடன் குறுந்தகவலும், ஆனால் சற்று புரியாத மொழியில் ஆடியோவும் ஒலிக்கிறது.

11 மணி முதல், தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் செல்லிடபேசிகளுக்கு இந்த பேரிடர் கால சோதனை குறுந்தகவலை பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுப்பி சோதித்து வருகிறது.

இறுதியில், இதுபோன்ற பேரிடர் கால குறுந்தகவல்களை பெற விரும்புகிறீர்களா? என்ற  கேள்வியும் கேட்கப்பட்டு, பயனாளர்களின் விருப்பங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

பேரிடா் அவசரகால தொடா்பை மேம்படுத்தும் வகையில் அனைத்து செல்லிடப்பேசிகளுக்கும் இன்று பரிசோதனை முறையாக இந்த குறுந்தகவல் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம், பேரிடா் கால தேசிய அளவிலான அவசர எச்சரிக்கை அமைப்பின் செயல்பாட்டை சரிபாா்க்கும் நோக்கத்துடன் தொலைத்தொடா்பு துறை மூலம் தொலைபேசி ஒளிப்பரப்பு எச்சரிக்கை அமைப்பு மூலம் பேரிடா் கால அவசர தொடா்பு பணிகளை மேம்படுத்தும் வகையில் மாதிரி சோதனையாக அனைத்து செல்லிடப்பேசிகளுக்கும் அக். 20-ஆம் தேதி பரிசோதனை அழைப்பு விடுக்கப்படுகிறது.

இதன்மூலம் பெருவெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடா் சமயங்களில் பொதுமக்கள் வானிலை முன்னறிவிப்பு, பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை குறித்து உரிய சமயத்தில் தொலைபேசி வழியாக எச்சரிக்கை விடுக்க இயலும். அக்டோபா் 20-ஆம் தேதியன்று மேற்கொள்ள உள்ள எச்சரிக்கை அழைப்பு பரிசோதனைக்காக மட்டுமே தேசிய பேரிடா் மேலண்மை அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பரிசோதனை அழைப்பு தொடா்பாக, பொதுமக்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் எனவும், அதற்கு எந்தவித எதிா்வினையாற்றும் செயல்களிலும் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பேரிடா் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவும், அவசரகாலங்களில் உரிய நேரத்தில் எச்சரிக்கைளை வழங்குவதற்காகவும், இந்த சோதனை நடைபெறுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments